FOR MY TEACHER...
This was the poem that I wrote for my Great Tamil Teacher. Read and enjoy it in Tamil. And leave a comment about my poem eventually! ஆசிரியருக்கு... எடுத்தேன் எனது பேனாவை எழுதவே ஓர் கவிதையை இது உங்கள் மாணவனின் ஏடு படித்து ருசியுங்கள் பொறுமையோடு. அடையாளமின்றி அறிமுகமாவீர்கள் ஆழ்ந்த அன்புடன் பழகுவீர்கள் மொழியைக் காட்டி அன்பை ஊட்டி தமிழைத் தழுவி எழுதும் நோக்கில் மனதின் போக்கில் விட்ட ஓர் கவிதையில் பேசுகிறேன் கேளுங்களேன்: சொல்வளம் மிக்க எழுத தக்க கவிஞன் அல்ல நான்! சொற்கள் அறிந்த எழுத தெரிந்த உங்கள் மாணவனே நான்! அ கரம் முதல் னகரம்வரையில் அ றிந்தவை அறிந்தேன் அ றியாதவை அறிந்தேன் என அ னைத்தும் அறிந்தேன். ஆ ழ்கடல் முதல் ஆகாசம் வரை ஆ ழ்ந்து ஆலோசித்து சிந்தித்து ஆ ளுமைகள் பல அறிந்து ஆ தாரங்கள் பல சேகரித்து இ யற்கை போற்றும் இனிய தமிழுக்கு இ சையும் கடந்து இசையும் மொழிக்கு இ சையூட்டும் இசையான பேச்சுக்கு இ ன்றும் என்றும் இறப்பே இல்லை. உ ழைப்பை வளர்க்கும் உழைப்பாருக்கு உ ள்ளம் குளிரும் உ ரையை உரை...