FOR MY TEACHER...
This was the poem that I wrote for my Great Tamil Teacher. Read and enjoy it in Tamil. And leave a comment about my poem eventually!
ஆசிரியருக்கு...
எடுத்தேன்
எனது பேனாவை
எழுதவே ஓர்
கவிதையை
இது உங்கள்
மாணவனின் ஏடு
படித்து
ருசியுங்கள் பொறுமையோடு.
அடையாளமின்றி
அறிமுகமாவீர்கள்
ஆழ்ந்த
அன்புடன் பழகுவீர்கள்
மொழியைக்
காட்டி
அன்பை ஊட்டி
தமிழைத் தழுவி
எழுதும்
நோக்கில்
மனதின்
போக்கில்
விட்ட ஓர்
கவிதையில்
பேசுகிறேன்
கேளுங்களேன்:
சொல்வளம் மிக்க
எழுத தக்க
கவிஞன் அல்ல
நான்!
சொற்கள் அறிந்த
எழுத தெரிந்த
உங்கள் மாணவனே
நான்!
அகரம் முதல்
னகரம்வரையில்
அறிந்தவை
அறிந்தேன்
அறியாதவை
அறிந்தேன் என
அனைத்தும்
அறிந்தேன்.
ஆழ்கடல் முதல்
ஆகாசம் வரை
ஆழ்ந்து
ஆலோசித்து சிந்தித்து
ஆளுமைகள் பல
அறிந்து
ஆதாரங்கள் பல
சேகரித்து
இயற்கை
போற்றும் இனிய தமிழுக்கு
இசையும் கடந்து
இசையும் மொழிக்கு
இசையூட்டும்
இசையான பேச்சுக்கு
இன்றும்
என்றும் இறப்பே இல்லை.
உழைப்பை
வளர்க்கும் உழைப்பாருக்கு
உள்ளம்
குளிரும்
உரையை
உரைக்கும்
உரையே இது
ஊக்கம்
கொடுக்கும் உள்ளம் அது
ஊரே வியக்கும்
திறமுண்டு
ஊரே போற்றும்
உழைப்பிற்கு
ஊதியமே உங்கள்
மாணவனின் இக்கவிதை.
எவையும் அறிந்த
மன்னவராய்
எதையும்
அறியும் வல்லவராய்
எவற்றையும்
பொறுக்கும் மனமுடையவராய்
எல்லா
குணங்களும் உடையவராய் -
ஏழ்கடல்களின்
ஆழம் போல்
ஏழு
வண்ணங்களின் குணங்கள் போல்
ஏடுகள் பல
புணர்ந்தது போல் -
ஏழு கண்டங்கள்
கூறிப் போற்றுமே.
ஐயங்கள்
தீர்க்கும் ஆசிரியர் நீங்கள்.
ஐங்குணங்கள்
உடையவர் நீங்கள்.
தமிழுக்கு
உடம்பும் உயிரும் என்றும் உண்டே!
எனது நன்றிபல கூறவே
பின்வரும்
அடிகளே:
தமிழை ஊட்டியமைக்கு
நன்றிபல.
வழிகள் பல
காட்டியமைக்கு நன்றிபல.
தத்துவங்கள் பல
கூறியமைக்கு நன்றிபல.
சொற்கள் பல
கற்பித்தமைக்கு நன்றிபல.
கவிதைகள் பல இயற்ற
தூண்டியமைக்கு நன்றிபல.
சிந்தனைகள் பல
ஊன்றியமைக்கு நன்றிபல.
கருத்துகள் பல
போதித்தமைக்கு நன்றிபல.
தமிழைச் சிறப்பித்தமைக்கும்
நன்றிபல.
சிந்தனைகள் பற்பல
ஓடுகின்றன;
வார்த்தைகள்
பற்பல தேடுகின்றன.
தினமும் வளரும்
உறவு இது;
முடிவே இல்லாத
தொடர்பு அது.
எங்கும்
என்றும் சொல்வேனே:
நான் என்றும்
உங்கள் மாணவனே.
நான் பார்த்து வியந்த மிகச் சிறந்த மாமாணவன் நீ.
ReplyDeleteGOOD AND NICE POEM 😍😍😍
ReplyDeleteYour teacher will trained you excellently ☺️☺️☺️
ReplyDeleteIt is very nice my bestie
ReplyDeleteஅருமையான ஆசிரியருக்கு அருமையான மாணவரின் இனிமையான படைப்பு.வாழ்க வளத்துடன்
ReplyDeleteதம்பி விஷ்ணு மூர்த்திக்கு,
ReplyDeleteபெயரில் உள்ளது மூர்த்தி...
உன் கவி பெரும் பெறும் கீர்த்தி..
இந்த இளம் வயதிலேயே தமிழில் இவ்வளவு அழகிய கவியை பொருளுடன் எழுதும் உன் திறன் கண்டு வியக்கிறேன்.வாழ்த்துகிறேன்.