Posts

Showing posts from May, 2024

For My Friend...

  I have written a Poem and conveyed some information to one of my friends in Tamil . Read the Poem given below and comment your views eventually! Here the Poem comes... நாற்காலியில் அமர்ந்து பேனாவைத் திறந்து மெய்தனை மறந்து கற்பனையில் பறந்து எழுத்துகளுடன் சேர்ந்து அடிகளுடன் ஊர்ந்து கருத்தினைக் கூர்ந்து நோக்கும் நோக்கில் எழுதப்படாத இதில் எழுதுகிறேன் மனத்தில் இருப்பதை... கவிதை நாயகனாகவோ கவிஞர் மாணவனாகவோ எழுதவில்லை நான் இதை! உனது நண்பனாக; கூடப் பழகியவனாக உன்னை அறியாமல் அறிந்தவனாய் உன்னை தெரியாமல் தெரிந்தவனாய் இருப்பினும், என்றும் உன் நண்பனாய் இருக்கவே விரும்பி எழுதுகிறேன்... மையக்கருத்து ஒன்றை கூறுகிறேன் கேட்பாயாக: உன் இளமையில் பெரும் பங்காற்றுபவர் யாரெனின் உன் ஆசிரியரே! உன்னுல் ஒழுக்கத்தை விதைப்பவர் அவர்தான். அவ்விதையை வளர்ப்பவரும் அவர்தான். அத்தகு ஆசிரியர்கள் இங்கு சிலர்தான்! நல்லாசிரியர் ஒருவர் கிடைக்கவே உன் வாழ்வு மலருமே. உன்னை வெளிப்படுத்திக் கொள்கையில் உறவு இடையே வளர்கையில் உன் எதிர்காலம் மலருமே! பேச வெட்கம் இல்லாமல் பேச கூச்சம் கொள்ளாமல் பேச தயக்கம் கருதாமல் பேசிப் பழகு. பேச வ...

SPECIAL LITERATURE

I have written a poem in Tamil for Tamil as it has helped me widely to write P oems in Tamil to my Teachers. Read the Poem below which I wrote for Tamil in Tamil and enjoy... Eventually, comment your views/reviews about my Poem . தமிழே இது உனக்காக... இனிதினும் இனிய இன்னிசை இணைந்த இன்மை இல்லாத இனியதோர் இயல் இயற்றவே இறங்கி இல்லத்தில் அமர்ந்து உள்ளத்தைத் திறந்து மெய்தனை மறந்து, மெய்யின் மெய்யான, மென்மையில் மேன்மையான, மேகத்தினும் மேலான, மேலாதிக்க மொழியான தமிழைத் தழுவி தமிழுக்கே தருகிறேன் எனது கவிதையினை... "எடுத்தேன் எனது பேனாவை எழுதவே ஓர் கவிதையை" என எண்ணி எழுத ஏற்ற எழுத்துகளை எடுத்துக்கொடுத்த என் தேன்மொழி தமிழுக்கே தருகிறேன் எனது கவிதையினை... மன்னும் மலையும் மரமும் செடியும் நதியும் ஓடையும் காயும் பழமும் விதையும் விந்தையும் என எவற்றையும் ஏற்று என்றும் எதிலும் நிலையாய் நிற்கும் எழிலின் எழில்மிகு தமிழுக்கே தருகிறேன் எனது கவிதையினை... சிறப்பினும் சிறப்பான சிற்பிகளை செதுக்கும் பிறப்பிலே சிறந்த சிறப்பின் சிறப்பான செம்மொழிச் செல்வமான தமிழுக்கே தருகிறேன் எனது கவிதையினை... புலவர் பாட்டில...