SPECIAL LITERATURE

I have written a poem in Tamil for Tamil as it has helped me widely to write Poems in Tamil to my Teachers.

Read the Poem below which I wrote for Tamil in Tamil and enjoy...

Eventually, comment your views/reviews about my Poem.


தமிழே இது உனக்காக...

இனிதினும் இனிய
இன்னிசை இணைந்த
இன்மை இல்லாத
இனியதோர் இயல்
இயற்றவே இறங்கி
இல்லத்தில் அமர்ந்து
உள்ளத்தைத் திறந்து
மெய்தனை மறந்து,
மெய்யின் மெய்யான,
மென்மையில் மேன்மையான,
மேகத்தினும் மேலான,
மேலாதிக்க மொழியான
தமிழைத் தழுவி
தமிழுக்கே தருகிறேன்
எனது கவிதையினை...

"எடுத்தேன் எனது பேனாவை
எழுதவே ஓர் கவிதையை"
என எண்ணி
எழுத ஏற்ற
எழுத்துகளை எடுத்துக்கொடுத்த
என் தேன்மொழி
தமிழுக்கே தருகிறேன்
எனது கவிதையினை...

மன்னும் மலையும்
மரமும் செடியும்
நதியும் ஓடையும்
காயும் பழமும்
விதையும் விந்தையும்
என எவற்றையும் ஏற்று
என்றும் எதிலும்
நிலையாய் நிற்கும்
எழிலின் எழில்மிகு
தமிழுக்கே தருகிறேன்
எனது கவிதையினை...

சிறப்பினும் சிறப்பான
சிற்பிகளை செதுக்கும்
பிறப்பிலே சிறந்த
சிறப்பின் சிறப்பான
செம்மொழிச் செல்வமான
தமிழுக்கே தருகிறேன்
எனது கவிதையினை...

புலவர் பாட்டில்
புன்னகை பூக்க,
நன்செய் மரத்தில்
நனிபழம் காய்க்க,
நாற்றைத் துறந்து
நெர்பயிர் துவங்க,
மலர்கள் மலர்ந்து
மலையாய் குவிக்க,
அணிநிழற் காடுகள்
அன்றாடும் ஆட,
தென்றல் தேடும்
தேனாய் இருக்கும் -
என்றும் எதிலும்
எல்லையின்றி எழும்பும்
தமிழுக்கே தருகிறேன்
எனது கவிதையினை...

இனிமையுடன் இணைந்து
இன்னிசை நுகர்ந்து
விண்ணில் பறந்து
விதைபோல் சிந்தித்து
தடைகள் தகர்ந்து
தமிழுடன் தவழ்ந்து
தமிழுக்கே தருகிறேன்
எனது கவிதையினை...

தமிழைக் கண்டு
தமிழைக் கொண்டு
தமிழைத் தேர்ந்து
தமிழைத் தழுவி
தவழ்ந்து தவழ்ந்து
தமிழுக்கே தருகிறேன்
எனது கவிதையினை...

நன்றிபல கூறிட
வார்த்தைகள் எழுதிட
எழுத்துகள் தோன்றிட
சிந்தனைகள் ஓடிட -
வார்த்தைகள் கொடுத்திட
தமிழே வந்திட,
அதை நானும் கண்டிட
பேனாவை எடுத்திட
நன்றிபல குறிப்பிட
கவிதைகள் எழுதிட
துணைனிற்கும் தமிழுக்கு
நன்றயினை கூறிடவே
எழுதுகிறேன் நான்
ஓர் கவிதையினை...

சிந்தாமணி சிந்தியிருந்தால் அதன்
சிறப்பு சிதரியிருந்திருக்கும்.
குன்றின்மணியைக் கூட
சிந்தாமணியை விட
சிறப்பாக்கும் சிறந்த
சிந்தனைகளைச் சிதறச் சிதற
அள்ளிக் கொடுக்கும்
அன்னை தமிழுக்கே
எழுதுகிறேன் நான்
ஓர் கவிதையினை...

"மழைமேக மாலையில்
தென்னையில் தேனீக்கள்
தெளிவான தேனினை
செல்வமாய் சேர்த்திட,
புன்செய் பூச்செடி
அலர்கள் ஆக்கிட,
எங்கும் ஏரிகள்
தண்ணீர் தாங்கிட -
என எங்கும்
எதிலும் என்றும்
தெரிவது தமிழே"
என எழிலூட்டி
எழுதுகிறேன் நான்
ஓர் கவிதையினை...

எழில்மிகு தமிழுக்கு
எழிலூட்டி எழுதிட
எழில்மிகு தமிழையே
எழிலூட்ட அழைத்தும்
எழில் போதவில்லையே என
எழிலூட்டி எழுதுகிறேன் நான்
எழில்மிகு தமிழுக்கு
ஓர் கவிதையினை...

உன்னைத் தழுவி
உனக்கே எழுதுகிறேன்,
கா. விஷ்ணுமூர்த்தி.


Also read:

1. Click here to read the poem "THE BEST SCHOOL EVER SEEN"

2. Click here to read the poem "FOR MY TEACHER"

3. Click here to read the poem "I AM YOUR STUDENT"


How was my Poem?

Comments

Popular Posts from the page

FOR MY TEACHER...

The Best School ever seen

FOR THE PEN OF MINE...