For My Friend...
I have written a Poem and conveyed some information to one of my friends in Tamil.
Read the Poem given below and comment your views eventually!
Here the Poem comes...
நாற்காலியில் அமர்ந்து
பேனாவைத் திறந்து
மெய்தனை மறந்து
கற்பனையில் பறந்து
எழுத்துகளுடன் சேர்ந்து
அடிகளுடன் ஊர்ந்து
கருத்தினைக் கூர்ந்து
நோக்கும் நோக்கில்
எழுதப்படாத இதில்
எழுதுகிறேன் மனத்தில்
இருப்பதை...
கவிதை நாயகனாகவோ
கவிஞர் மாணவனாகவோ
எழுதவில்லை நான் இதை!
உனது நண்பனாக;
கூடப் பழகியவனாக
உன்னை அறியாமல் அறிந்தவனாய்
உன்னை தெரியாமல் தெரிந்தவனாய்
இருப்பினும், என்றும் உன் நண்பனாய்
இருக்கவே விரும்பி எழுதுகிறேன்...
மையக்கருத்து ஒன்றை
கூறுகிறேன் கேட்பாயாக:
உன் இளமையில்
பெரும் பங்காற்றுபவர்
யாரெனின் உன் ஆசிரியரே!
உன்னுல் ஒழுக்கத்தை விதைப்பவர் அவர்தான்.
அவ்விதையை வளர்ப்பவரும் அவர்தான்.
அத்தகு ஆசிரியர்கள் இங்கு சிலர்தான்!
நல்லாசிரியர் ஒருவர் கிடைக்கவே
உன் வாழ்வு மலருமே.
உன்னை வெளிப்படுத்திக் கொள்கையில்
உறவு இடையே வளர்கையில்
உன் எதிர்காலம் மலருமே!
பேச வெட்கம் இல்லாமல்
பேச கூச்சம் கொள்ளாமல்
பேச தயக்கம் கருதாமல்
பேசிப் பழகு.
பேச வெட்கம் இல்லாமல்
பேச கூச்சம் கொள்ளாமல்
பேச தயக்கம் கருதாமல்
பேசியதன் விளைவே இக்கவிதை,
நினைவில் கொள்.
கேள்விகள் பல கேட்கவே
சிந்தனைகள் பல தோன்றுமே.
புதிர்கள் பல அறியவே
பதில்கள் பல தெரியுமே.
பிழைகள் சில செய்யவே
பாடங்கள் பல தோன்றுமே.
ஆசிரியரை நீ நோக்கவே
அவர் கூறுவது புரியுமே.
உன் ஆசிரியருடன் பேசுவாய்;
தத்துவங்கள் பல அறிவாய் -
என நம்புகிறேன் நான்.
வினாக்கள் எழுப்பி
பேசிப் பழகி
விடைகள் அறிந்து
கருத்துகள் தெரிந்து
பேச்சைக் கூர்ந்து
ஊற்றாய் ஊர்ந்து
ஆளுமைகள் அறிந்து
வினாவத் தெரிந்து
தடைகள் தகர்ந்து
அறிவை நுகர்ந்து
தமிழில் எழுத
சிந்தனைகள் தோன்ற
கவிதைகள் இயற்ற
வளங்கள் பெற்று
அறிவை வளர்க்க
எவையும் அறிய
ஆசைகள் கொண்டு
தோல்விகள் கண்டு
வளர்ந்தவனே நான்.
சிறகாய் விரிந்து,
கழுகாய் பறந்து,
மலராய் மலர்ந்து,
நதியாய் ஓடி
அறிவைத் தேடி,
குருவுடன் கூடி -
அவருதவிகள் நாடி
வளர்வாய் நீ
உறுதியாக!
விடைபெறுகிறேன்,
கா. விஷ்ணுமூர்த்தி.
How was the Poem?
Did you like?
Also read:
1. Click here to read the article of "BEING A STUDENT"
2. Click here to read "THE BEST SCHOOL EVER SEEN"
What is your friend name? Please tell.
ReplyDelete