FOR THE PEN OF MINE...
I have written a poem in Tamil for the pen which I used and use to write the poems.
Read the poem below which I wrote for my pen with my pen in Tamil and leave a comment eventually about the poem!
எழிலூட்டும் தோழனுக்கு...
எழுத்துகள் பற்பல
எழுதிட என்னுடனே
இருந்த எனது
எழிலூட்டும் எழுதுகோலே!
எழிலூட்டி எழுதும்
உனக்கே எழிலூட்டி
எழுதும் நோக்கில்
எழுதுகிறேன் நான்
என் கரம் பட
உனக்கே... (10 - 1/9)
சிந்தனைகள் பற்பல ஓடினும்
வார்த்தைகள் பற்பல தேடினும்
எழுத்துகள் எவையும்
மெய்பட எழுதிட
மையேந்தி வரும்
உனக்கே எழிலூட்டி
எழுதும் நோக்கில்
எழுதுகிறேன் நான்
என் கரம் பட
உனக்கே... (10 - 2/9)
இலக்கண இலக்கிய
கருத்துகள் கவர்ந்து
சிறப்பாய் சிந்தித்து
என் முன்னோர்
உன் முன்னோர்
கொண்டு வான்புகழ்
அடைந்தும் உன்
சிறப்பை சிந்தித்து
சிறப்பாற்றும் வகையில்
இயற்றாமல் சென்றதால்
உனக்கே எழிலூட்டி
எழுதும் நோக்கில்
எழுதுகிறேன் நான்
என் கரம் பட
உனக்கே... (15 - 3/9)
மெய்யுக்கு மெய்யூட்டு
மை கொண்ட
மையோடும் கூர்
முனை கொண்ட
உனக்கே எழிலூட்டி
எழுதும் நோக்கில் எழுதுகிறேன் நான்
என் கரம் பட
உனக்கே... (9 - 4/9)
வானத்தின் வண்ணத்தை - உன்
தாகத்திற்குத் தந்து
மாலையில் மழைபொழியும்
தருணத்தில் சிந்தித்து
சொல்லுக்குள் நீந்தி
கற்பனைக்குள் மூழ்கி
சிந்தித்து சிந்தித்து
உனக்கே எழிலூட்டி
எழுதும் நோக்கில்
எழுதுகிறேன் நான்
என் கரம் பட
உனக்கே... (12 - 5/9)
எங்கேயும் எப்பொழுதும்
என்னுடனே எழுதிடவே,
எண்ணங்கள் எழுத்துகளாக
எழுத்துகள் வார்த்தைகளாக
வார்த்தைகள் வாக்கியங்களாக
வாக்கியங்கள் கவிதைகளாக
மை சிந்தி
துணை நிற்கும்
துணை உனக்கே - எழிலூட்டி
எழுதும் நோக்கில்
எழுதுகிறேன் நான்
என் கரம் பட
உனக்கே... (13 - 6/9)
கூர்முனை கொண்டிருப்பினும்
காயங்கள் ஆற்றவும்
கூர்முனை கொண்டிருப்பதால்
வீரத்தை வெளிப்படுத்தவும்
நாள்பாராது உழைத்திடும்
உனக்கே எழிலூட்டி
எழுதும் நோக்கில்
எழுதுகிறேன் நான்
என் கரம் பட
உனக்கே... (10 - 7/9)
உனை தழுவி
எழுதும் நான்,
உனை தாங்கும்
உன்னத காகிதம்
மீது கவனங்கொண்டு
உனை கொண்டு
உனை தாங்கும்
உன் தோழனுக்கு
உனை கொண்டு
ஓரிரு வரிகள்
இயற்றவுள்ளேன்,
என்னோடு எழுதுவாயாக... (12 - 8/9)
காதல் முதல் காவியம் வரை
இலக்கணம் முதல் இலக்கியம் வரை
என் முன்னோர்
உன் முன்னோர் கொண்டு
பிறப்பிலே சிறந்த
தமிழ் கொண்டு
சிறப்பிற்கே சிறந்த
சிந்தனைகள் இயற்றி
சிதற விட்டனர் எத்திசையிலும்
உன் தோழன் உதவி நாடி! (10 - 9/9)
உன்னைப் பற்றி எழுதுகிறேன்,
கா. விஷ்ணுமூர்த்தி.
Comments
Post a Comment
Readers are requested to leave a comment so that I can get some experiences about your views!!!